ஆனியன் பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  2 கப்,
  • பெரிய வெங்காயம்  2,
  • மிளகுதூள்  அரை டீஸ்பூன்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • கரம் மசாலாதூள்  கால் டீஸ்பூன்,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை, மிக மெல்லியதாக நீளநீளமாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு, அத்துடன் உப்பு, மிளகுதூள், கரம் மசாலா சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும்வரை வதக்கி வைக்கவும்.

கோதுமை மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். முன் சொன்னது போல மாவை உருண்டைகளாக்கி, நடுவே வெங்காயக் கலவையை வைத்து, பூரிகளாகத் தேய்த்துப் பொரிக்கவும். பொட்டுக்கடலை பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  2 கப்,
  • பொட்டுக்கடலை மாவு  அரை கப்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • ஓமம்  கால் டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய்,
  • இஞ்சி, மல்லித்தழை (மூன்றும் பொடியாக நறுக்கியது)  தலா 2 டீஸ்பூன்,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசையவும். பொட்டுக்கடலை மாவுடன், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை ஓமம், உப்பு சேர்த்து கலந்து பூரணம் தயாரிக்கவும் (அது உதிராகத்தான் இருக்கும்). கோதுமை மாவில் சிறு உருண்டைகள் செய்து, பொட்டுக்கடலை பூரணத்தை உள்ளே வைத்து, பூரிகளாகத் தேய்த்துப் பொரித்தெடுக்கவும். இதற்கு, மசாலா தயிர், ஊறுகாய், பச்சை சட்னி, தக்காளி சாஸ் ஏதேனும் ஒன்றை தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.