Post List Style 3

கதம்பப்பொடி

தேவையானவை: துவரம்பருப்பு  ஒரு கப், கடலைப்பருப்பு  ஒரு கப், உளுத்தம்பருப்பு  ஒரு கப், காய்ந்த மிளகாய்  15, மிளகு  4 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இவைகளை சிவக்க வறுத்துக்கொண்டு, காய்ந்த மிளகாய், மிளகு இவைகளையும் வறுத்து கலந்து சேர்த்து அரைக்கவும். அவசரத் தேவைக்கு சாதத்தோடு பிசைந்து உண்ண உபயோகப்படும்.

தேங்காய்ப்பொடி

தேவையானவை: தேங்காய்  ஒரு மூடி, உளுத்தம்பருப்பு  கால் கப், காய்ந்த மிளகாய்  5, பெருங்காயம்  பட்டாணி அளவு, நல்லெண்ணெய்  முக்கால் டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு. செய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவலை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு மீதி எண்ணெயில் உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து, மிளகாயையும்,

சம்பாப்பொடி

தேவையானவை: சீரகம்  2 டேபிள் ஸ்பூன், மிளகு  2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு. செய்முறை: சீரகம், மிளகு, உப்பு இவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சாதத்துடன் பிசைந்து சாப்பிட மணமாகவும், ருசியாகவும் இருக்கும். பசியைத் தூண்டும்.