இட்லி மாவு போண்டா

தேவையானவை:

  • இட்லி மாவு  2 கப்,
  • சின்ன வெங்காயம்  1 கப்,
  • பச்சை மிளகாய்  3,
  • தேங்காய் துருவல்  கால் கப்,
  • கறிவேப்பிலை  சிறிது,
  • உப்பு  ருசிக்கேற்ப,
  • எண்ணெய்  தேவைக்கு.

தாளிக்க:

  • கடுகு  அரை டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன்,
  • கடலைபருப்பு  2 டீஸ்பூன்.

செய்முறை: எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து, நன்கு கலக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு, நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். இட்லி மாவு மீந்துபோகும் சமயங்களிலும் திடீர் விருந்து வரும்போதும் இந்த போண்டாவை செய்து அசத்துங்கள்.