...

இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி

தேவையானவை:

  • தக்காளி   6,
  • புளி விழுது   ஒரு டேபிள்ஸ்பூன்,
  • சாம்பார் பொடி   ஒன்றரை டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள்   கால் டீஸ்பூன்,
  • உப்பு   தேவையான அளவு.

தாளிக்க:

  • கடுகு   அரை டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு   ஒரு டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய்   4,
  • கறிவேப்பிலை   சிறிது,
  • எண்ணெய்   2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: தக்காளி, சாம்பார் தூள், புளி விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பச்சைமிளகாயை இரண்டாக நீளவாக்கில் நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடுங்கள். சற்று கெட்டியானதும் இறக்குங்கள். அவசர தேவைக்கு அசத்தல் சட்னி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.