உருளைக்கிழங்கு வெஜிடபிள் வடை

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம் – 1, சிறிய கேரட் – 1, பீன்ஸ் – 1, பச்சை பட்டாணி – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய குடமிளகாய் – 2 டீஸ்பூன், கடலை மாவு – 2 டீஸ்பூன், பச்சரிசி மாவு – 2 டீஸ்பூன், தூள் உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 2 கப்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது). கேரட்டை தோல் நீக்கி துருவவும். பீன்ஸ், குடமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய்விட்டு பட்டாணியுடன் சேர்த்து லேசாக வதக்கி, மசித்த கிழங்குடன் சேர்க்கவும். பச்சரிசி மாவு, கடலை மாவு, காய்கள், மசித்த கிழங்கு, உப்பு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, தட்டிய வடைகளை அதில் போட்டு வேகவைத்து, சிறிது சிவந்து மொறுமொறுவென வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X