தேவையானவை: உருளைக்கிழங்கு – 3, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 5 பல், முதல் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், இரண்டாம் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.
வறுத்து அரைக்க: பச்சை மிளகாய் – 4, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன். தாளிக்க: பட்டை – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து ஒன்றிரண்டாக உதிர்த்துவையுங்கள். பூண்டு, இஞ்சியை நசுக்கிக்கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்குங்கள். இரண்டாவது பாலில் வெங்காயம் இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே வேகவிடுங்கள். வெங்காயம் வெந்ததும், உருளைக்கிழங்கு சேருங்கள். பச்சை மிளகாய், பொட்டுக்கடலை இரண்டையும் வறுத்து அரைத்துச் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, பட்டை, கறிவேப்பிலை தாளித்து இறக்கி, முதல் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்குங்கள்.