தேவையானவை:
- முழு உளுத்தம்பருப்பு அரை கப்,
- காய்ந்த மிளகாய் 12,
- தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்,
- புளி பெரிய நெல்லிக்காய் அளவு,
- பெருங்காயம் ஒரு டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு,
- எண்ணெய் ஒன்றரை டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எண்ணெயைக் காயவைத்து மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வாசனை வரும் வரை வறுத்து, தேங்காய், புளி சேர்த்து மேலும் சிறிது வறுத்து இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரைத்தெடுங்கள். கெட்டியாக இருந்தால் சாதத்துக்கும், சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்தால் இட்லிக்கு சட்னியாகவும் சுவை கொடுக்கும், இந்த உளுந்து துவையல்.