தேவையானவை:
- துவரம்பருப்பு ஒரு கப்,
- கடலைப்பருப்பு ஒரு கப்,
- உளுத்தம்பருப்பு ஒரு கப்,
- காய்ந்த மிளகாய் 15,
- மிளகு 4 டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இவைகளை சிவக்க வறுத்துக்கொண்டு, காய்ந்த மிளகாய், மிளகு இவைகளையும் வறுத்து கலந்து சேர்த்து அரைக்கவும். அவசரத் தேவைக்கு சாதத்தோடு பிசைந்து உண்ண உபயோகப்படும். நாள்பட கெடாமலும் இருக்கும்.