கத்திரிக்காய் பச்சடி

தேவையானவை:

  • கத்திரிக்காய்  3,
  • பெரிய வெங்காயம்  1,
  • பச்சை மிளகாய்  4,
  • கடுகு  அரை டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன்,
  • உப்பு  திட்டமாக,
  • எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • மல்லித்தழை  சிறிதளவு,
  • கறிவேப்பிலை  2 ஆர்க்கு.

செய்முறை: பூச்சி அரிக்காத நல்ல கத்திரிக்காயாகப் பார்த்து வாங்கவும். தணலில் சுடவும். ஆறியதும் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். (கத்திரிக்காயை நான்காக நறுக்கித் தண்ணீரில் போட்டும் வேகவைக்கலாம். ஆனால், சுடுவதால் பச்சடி மணமாக இருக்கும்). மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, பிசைந்த கத்திரிக்காயையும், உப்பையும் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் தயிர், மல்லித்தழை சேர்க்கவும்.