தேவையானவை:
- கத்திரிக்காய் கால் கிலோ,
- வர மிளகாய் 4,
- தேங்காய் துருவல் கால் மூடி,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- சின்ன வெங்காயம் ஐந்தாறு,
- பூண்டு 2 பல், உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கத்திரிக்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இரும்புச் சட்டியில் தாளித்துப் போட்டுக் கத்தரிக்காயை வதக்கவும். வரமிளகாய், தேங்காய், சீரகம், பூண்டு, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். காய் வெந்ததும் உப்பு, அரைத்த மசாலா சேர்த்து வதக்கி இறக்கவும். பார்த்தாலே நாவூற வைக்கும் வதக்கல் அயிட்டம் இது.