தேவையானவை:
- கோதுமை மாவு ஒன்றேகால் கப்,
- மைதா மாவு கால் கப்,
- கடலை மாவு கால் கப்,
- சோயா மாவு கால் கப்,
- கேழ்வரகு மாவு கால் கப்,
- சோள மாவு கால் கப்,
- ஓமம், சீரகம்,
- கருஞ்சீரகம் தலா அரை டீஸ்பூன்,
- இஞ்சிபச்சை மிளகாய் விழுது ஒரு டீஸ்பூன்,
- பொடியாக நறுக்கிய மல்லித்தழை 2 டீஸ்பூன்,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: எல்லா மாவுகளையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். அத்துடன் இஞ்சிபச்சை மிளகாய் விழுது, ஓமம், சீரகம், கருஞ்சீரகம், மல்லித்தழை, எண்ணெய் கலந்து பிசைந்து, பூரிகளாக தேய்த்துப் பொரித்தெடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டித் தயிர் நன்றாக இருக்கும்.