தேவையானவை:
- உளுத்தம்பருப்பு அரை கப்,
- கடலைப்பருப்பு கால் கப்,
- பாசிப்பருப்பு அரை கப்,
- பச்சரிசி அரை கப்,
- உப்பு,
- எண்ணெய் தலா தேவையான அளவு. .
அரைக்க: பூண்டு 6 பல், ஓமம் 2 டீஸ்பூன்
செய்முறை: அரிசி நீங்கலாக பருப்புகளை தனித்தனியே வறுத்துக்கொள்ளுங்கள். பின்பு அரிசியுடன் ஒன்றாக சேர்த்து மிஷினில் அரைத்துக்கொள்ளுங்கள். நன்கு சலித்தெடுங்கள். பூண்டு, ஓமத்தை நன்கு அரைத்து அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். மாவில் 2 கரண்டி எண்ணெயை சூடாக்கி ஊற்றுங்கள். அத்துடன் உப்பு, வடிகட்டிய ஓமத் தண்ணீர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து ஓமப்பொடி குழலில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து வேகவையுங்கள்.