காலிஃப்ளவர் பச்சடி

தேவையானவை:

  • காலிஃப்ளவர்  சின்னப் பூவில் பாதி,
  • பச்சை மிளகாய்  2,
  • சீரகத்தூள்  கால் டீஸ்பூன்,
  • மல்லித்தழை  சிறிதளவு,
  • உப்பு  திட்டமாக,
  • தயிர்  ஒரு கப்,
  • கடுகு  அரை டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  2 சிட்டிகை,
  • கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு.

செய்முறை: பூ மூழ்கும் அளவு உப்புத் தண்ணீரில் ஒரு 10 நிமிடம் வைத்திருந்து, சின்னச் சின்னப் பூவாகப் பிய்த்தெடுத்து, குக்கரில் ஒரு ஆவி வேக விடவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மிளகாயை வதக்கி, வெந்த காலிஃப்ளவருடன் சேர்க்கவும். உப்பு, சீரகத்தூள் கலக்கவும். கடைசியாக தயிர், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும்