காலிஃப்ளவர் பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  2 கப்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • சீரகம்  கால் டீஸ்பூன்,
  • கருஞ்சீரகம்  கால் டீஸ்பூன்,
  • காலிஃப்ளவர்  1, பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)  ஒரு டீஸ்பூன்,
  • இஞ்சி விழுது  ஒரு டீஸ்பூன்,
  • பொடியாக நறுக்கிய மல்லித்தழை  3 டீஸ்பூன்,
  • எண்ணெய் அல்லது நெய்  ஒரு டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்,
  • எண்ணெய்  பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு சுத்தப்படுத்திக்கொள்ளவும். பிறகு, சிறு துண்டு களாக உதிர்த்து துருவிக்கொள்ளவும். காலிஃப்ளவருடன், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, சீரகம், கருஞ்சீரகம், மஞ்சள்தூள் ஆகிய எல்லா வற்றையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். கோதுமை மாவில் செப்புசெய்து, பூரணத்தை வைத்து பூரியாகத் தேய்த்துப் பொரித் தெடுக்கவும்.