கேரட் தயிர் பச்சடி

தேவையானவை:

  • கேரட்  2,
  • கெட்டித் தயிர்  2 கப்,
  • எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்,
  • பச்சைமிளகாய்  4,
  • இஞ்சி  ஒரு சிறிய துண்டு,
  • உப்பு  திட்டமாக,
  • தேங்காய் துருவல்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • கடுகு  அரை  தலா தேவையான அளவு.
  • உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை, மல்லித்தழை

செய்முறை: கேரட்டை தோல் சீவி, துருவவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியையும் தோல் சீவி மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
எண்ணெயில் தாளிதம் போட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி கேரட் துருவலில் சேர்த்து உப்புப் போடவும். தேங்காய் துருவலையும் சேர்க்கவும். பரிமாறும்பொழுது கேரட் கலவையில் தயிர் சேர்த்து, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும்.