கொத்துமல்லி தக்காளி தொக்கு

தேவையானவை:

  • பழுத்த தக்காளி   5,
  • மல்லித்தழை   ஒரு கட்டு,
  • மஞ்சள்தூள்   கால் டீஸ்பூன்,
  • புளி   நெல்லிக்காய் அளவு,
  • மிளகாய்தூள்   ஒன்றரை டீஸ்பூன்,
  • பூண்டு   6 பல்,
  • வெந்தயம்,
  • பெருங்காயத்தூள்   அரை டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை   சிறிது,
  • உப்பு   தேவையான அளவு.

தாளிக்க:

  • கடுகு   அரை டீஸ்பூன்,
  • சீரகம் (விருப்பப்பட்டால்)   கால் டீஸ்பூன்,
  • எண்ணெய்   கால் கப்.

செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டை நசுக்கி கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு, சீரகம், தாளித்து பூண்டை சேர்த்து, நன்கு சிவந்து பொன்னிறமாக பொரிந்ததும், தக்காளியைச் சேருங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்தூள் சேருங்கள். அரை கப் கொதிநீரில் புளியைக் கரைத்து வடி கட்டுங்கள். இதனுடன் தக்காளி சேர்த்து கொதித்து, சேர்ந்து வரும்போது கறிவேப்பிலை, பொடி யாக நறுக்கிய மல்லித்தழையைப் போட்டு, வெந்தயத்தூள், பெருங் காயத்தூளை சேர்த்து சுருண்டு வரும்வரை கிளறி இறக்குங்கள்.