தேவையானவை:
- கோவைக்காய் கால் கிலோ,
- மிளகாய்தூள் முக்கால் டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- கடலைமாவு ஒன்றரை டீஸ்பூன்,
- கறிவேப்பிலை,
- மல்லி இலை சிறிதளவு,
- எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கோவைக்காயைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். எண்ணெயைச் சூடு செய்து சீரகத்தைப் போட்டு, அது சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு, கோவைக்காயை சேர்த்து வதக்கவும். அடுப்பை நிழலாக எரியவிட்டு, வாணலியை மூடி வைக்கவும். நடுநடுவில் அடிப்பிடிக்காமல் கிளறி விடவும். காய் வெந்து பொன் நிறமாக வதங்கியதும், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வதக்கி இறக்கும் முன் கடலைமாவு தூவிக் கிளறி இறக்கி, மல்லி இலை தூவவும்.