...

கோஸ் தயிர் பச்சடி

தேவையானவை:

  • முட்டைகோஸ்  100 கிராம்,
  • பச்சை மிளகாய்  2,
  • தேங்காய் துருவல்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • சின்ன வெங்காயம்  ஐந்தாறு,
  • கடுகு  அரை டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன்,
  • தயிர்  2 கப்,
  • உப்பு  திட்டமாக,
  • எண்ணெய்  ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
  • பொடியாக நறுக்கிய மல்லித்தழை,
  • கறிவேப்பிலை  தலா சிறிதளவு.

செய்முறை: கோஸைத் துருவிக்கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக்கொண்டு வெங்காயம், மிளகாயை வதக்கவும். கோஸையும் சேர்த்து லேசாக வதக்கி இறக்கி, உப்பு, தேங்காய் துருவல், மல்லித்தழை சேர்க்கவும். பரிமாறும் முன் தயிர் சேர்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.