சட்னி சாதம்

தேவையானவை:

  • பச்சரிசி  ஒரு கப்,
  • உப்பு  தேவையான அளவு,
  • நெய்  2 டேபிள்ஸ்பூன்.

வதக்கி அரைக்க:

  • சின்ன வெங்காயம்  15,
  • பூண்டு  3 பல்,
  • காய்ந்த மிளகாய்  6,
  • புளி  நெல்லிக்காய் அளவு,
  • எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:

  • கடுகு  அரை டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு.
  • எண்ணெய்  2 டீஸ்பூன்,

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து குழைவாக வடித்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மேல்புற சருகுத் தோலை மட்டும் நீக்குங்கள். பூண்டுப் பற்களை தோல் உரித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். நன்கு நிறம் மாறும் வரை வதக்கி, புளி, உப்பு சேர்த்து இறக்குங்கள். ஆறியதும் நன்கு அரைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேருங்கள். அத்துடன் சாதம், நெய் சேர்த்து நன்கு கலந்து சூடாக பரிமாறுங்கள்.