...

சாண்ட்விச் இட்லி

தேவையானவை:

  • – இட்லி மாவு – 2 கப்.
  • உள்ளே நிரப்பும் மசாலாவுக்கு:
  • பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (விருப்பம் போல்) – அரை கப்,
  • பெரிய வெங்காயம் – 2,
  • தக்காளி – 2,
  • இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
  • மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள் – கால் மல்லித்தழை,
  • கறிவேப்பிலை – தலா சிறிதளவு.

தாளிக்க: கடுகு, சோம்பு – தலா அரை டீஸ்பூன்,

டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன். செய்முறை: பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். அதோடு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, காய்கறிக் கலவை, தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, இட்லி தட்டுகளில் முதலில் அரைக் கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் 2 டீஸ்பூன் மசாலாவை வைத்து, மேலும் அரைக் கரண்டி மாவை ஊற்றி மூடுங்கள். நன்கு வேகவிட்டு எடுத்துப் பரிமாறுங்கள். இந்த சாண்ட்விச் இட்லியும் ‘அப்படியே சாப்பிடலாம்’ ரகம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.