...

சிம்பிள் வெஜ் ரைஸ்

தேவையானவை:

  • பாசுமதி அரிசி  ஒரு கப்,
  • காய்கறிகள் (பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ்)  அரை கப்,
  • பெரிய வெங்காயம்  1,
  • பச்சை மிளகாய்  3,
  • இஞ்சிபூண்டு விழுது  ஒரு டீஸ்பூன்,
  • உப்பு  தேவையான அளவு,
  • நெய்  2 டீஸ்பூன்.

தாளிக்க:

  • பட்டை  ஒரு துண்டு,
  • லவங்கம்  2, ஏலக்காய்  2,
  • எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்,
  • சோம்பு  கால் டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம், கீறிய மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். பிறகு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கி, காய்கறிகள் சேருங்கள். சிறிது உப்பு சேர்த்து, காய் நன்கு வேகும் வரை வதக்கி சாதம், நெய், சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.