தேவையானவை: நறுக்கிய சேனைக்கிழங்கு – 1 கப், தக்காளி – 1, பூண்டு – 6 பல், பெரிய வெங்காயம் – 1.
விழுதாக அரைப்பதற்கு: காய்ந்த மிளகாய் – 8, சோம்பு – கால் டீஸ்பூன், பூண்டு – 1 பல், சீரகம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்.
தாளிக்க: சோம்பு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், பட்டை – 1 சிறிய துண்டு, எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சதுரங்களாக நறுக்கி மண் போக அலசி, உப்பு சேர்த்து வேகவைத்து, நீரை வடித்து விடவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கவும். அரைப்ப வற்றை அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிப்பவற்றை போட்டு தாளித்து பூண்டு + வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவையும் சேர்த்து சிறிது கிளறவும். பின்னர் வேக வைத்த கிழங்கு + சிறிது தூள் உப்பு சேர்த்து வதக்கி வெந்ததும் எடுத்து பரிமாறவும். (இது சற்று தளர்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்)