தேவையானவை:
- சேமியா 2 கப்,
- பெரிய வெங்காயம் 2,
- கறிவேப்பிலை சிறிது,
- மல்லித்தழை சிறிது,
- உப்பு தேவைக்கு.
தாளிக்க:
- கடுகு 1 டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்,
- கடலைப்பருப்பு 2 டீஸ்பூன்,
- இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 4,
- எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தை நீளமாக நறுக்குங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி, 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். அதில் சேமியாவை சேர்த்து 2 நிமிடம் பெரிய தீயில் வேக விட்டு, பிறகு 5 நிமிடம் குறைந்த தீயில் மூடி போட்டு நன்கு வேகவிட்டு இறக்குங்கள். சூடாகப் பரிமாறுங்கள்.