...

சேமியா காய்கறி கட்லெட்

தேவையானவை:

 • சேமியா  அரை கப்,
 • உருளைக்கிழங்கு  2,
 • கேரட்  1, பீட்ரூட்  1,
 • பட்டாணி  கால் கப்,
 • பெரிய வெங்காயம்  1,
 • பச்சை மிளகாய்  3,
 • இஞ்சி  1 துண்டு,
 • புதினா  சிறிதளவு,
 • மல்லித்தழை  சிறிதளவு,
 • மைதா  அரை கப்,
 • பிரெட் தூள்  1 கப்,
 • மிளகுத்தூள்  1 டீஸ்பூன்,
 • கரம் மசாலா தூள்  1 டீஸ்பூன்,
 • உப்பு  ருசிக்கு, எண்ணெய்  பொரிக்க.

செய்முறை: சேமியாவை 3 கப் கொதிக்கும் நீரில் போட்டு, நன்கு வேக விட்டு வடியுங்கள். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, மல்லித்தழையைச் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள். பின்னர் துருவிய கேரட், பீட்ரூட்டையும், பட்டாணியையும் சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கி மசித்த உருளைக்கிழங்கு, சேமியா, கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கிளறி இறக்குங்கள். இக்கலவையை வேண்டிய வடிவத்தில் செய்து 1 கப் தண்ணீரில் கரைத்த மைதாவில் நனைத்தெடுத்து, பிரெட் தூளில் புரட்டி காயும் எண்ணெயில் பொரியுங்கள். சூடாக சாஸ§டன் பரிமாறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.