தேவையானவை:
சேமியா 1 கப்,
தோசை மாவு 4 கப்,
பெரிய வெங்காயம் 1,
தக்காளி 3,
புதினா கைப்பிடியளவு,
மல்லித்தழை கைப்பிடியளவு,
இஞ்சி, பூண்டு விழுது 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்,
உப்பு ருசிக்கு, எண்ணெய் பொரிக்க.
தாளிக்க: எண்ணெய் 2 டீஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்.
செய்முறை: சேமியாவை 6 கப் கொதிக்கும் நீரில் சேர்த்து நன்கு வேக விட்டு வடியுங்கள். எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். அத்துடன் தக்காளி, மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, சேமியா சேர்த்து கிளறி இறக்குங்கள். தோசைக் கல்லை காயவைத்து, மாவில் சிறிதளவு எடுத்து சற்று கனமாக தேயுங்கள். அதன் மேல் சேமியா கலவையை பரவினாற் போல் வைத்து புதினா, மல்லித்தழையை தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்கு வேக விட்டு திருப்பவும். மேலும் நன்கு வேக விட்டு எடுத்து, சூடாக பரிமாறுங்கள்.