தேவையானவை:
- சேமியா 1 கப்,
- பாசிப்பருப்பு அரை டீஸ்பூன்,
- வெல்லம் இரண்டரை கப்,
- தேங்காய்ப் பால் 1 கப்,
- ஏலக்காய்தூள் 1 டீஸ்பூன்,
- நெய் 2 டேபிள்ஸ்பூன்,
- பொடியாக நறுக்கிய தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
பாசிப்பருப்பை மலர வேகவையுங்கள். 5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை சேருங்கள். 2 நிமிடம் பெரிய தீயில் வைத்து, பிறகு தீயைக் குறைத்து நன்கு வேகவிடுங்கள். வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கரையவிடுங்கள். கொதித்ததும் வடிகட்டி பாசிப்பருப்புடன் சேமியாவில் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். அத்துடன் தேங்காய்ப் பால், ஏலக்காய்தூள் சேருங்கள். நெய்யைக் காயவைத்து தேங்காயை சிவக்க வறுத்து சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.