தேவையானவை: ஜவ்வரிசி அரை கப், கெட்டி அவல் ஒரு கப், தேங்காய் 1, பால் அரை கப், சர்க்கரை அரை கிலோ, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், ஏலத்தூள் தேவைக்கேற்ப, நெய் சிறிதளவு.
செய்முறை: கடாயில் லேசாக நெய் ஊற்றி, ஜவ்வரிசியையும் அவலையும் வறுத்து இரண்டையும் தனித்தனியாக அரைகுறையாக பொடித்துக்கொள்ளுங்கள். தேங்காயை துருவிக்கொள்ளுங்கள். தேங்காயுடன், முந்திரிப்பருப்பு சிறிது சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு அதில் உடைத்த ஜவ்வரிசியை முதலில் போட்டு வேகவிட்டு, 5 நிமிடம் கழித்து அவலையும் போட்டு வேகவையுங்கள். கெட்டியாக இருந்தால் சிறிது நீர் விட்டு வேகவிடுங்கள். பிறகு, அரைத்த தேங்காய்முந்திரிப்பருப்பு கலவையையும், சர்க்கரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு, கெட்டியானவுடன் முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் வறுத்துப் போட்டு, பொடித்த ஏலமும் போடுங்கள். இறக்கும் முன் பால் சேர்த்து இறக்கிப் பரிமாறுங்கள்.
ஜவ்வரிசி, அவலை வறுத்து பொடித்து டின்களில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டால், இப்பாயசத்தை நினைத்தவுடன் மிகவும் எளிதாக செய்யலாம்.