தேவையானவை:
- வெங்காயம் 2,
- நன்கு பழுத்த சிவப்பான தக்காளி 5,
- மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
- உப்பு தேவையான அளவு.
அரைத்துக் கொள்ள:
- இஞ்சி ஒரு துண்டு,
- பூண்டு 5 பல்,
- கசகசா 2 டீஸ்பூன்,
- சோம்பு ஒரு டீஸ்பூன்,
- பச்சைமிளகாய் 5,
- மல்லித்தழை ஒரு கைப்பிடி,
- தனியாதூள் ஒரு டீஸ்பூன்.
தனியாக அரைக்க:
- தேங்காய் துருவல் அரை கப்,
- முந்திரிப்பருப்பு 4,
- பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்.
தாளிக்க:
- பட்டை ஒரு துண்டு,
- லவங்கம் 2,
- ஏலக்காய் 2 கறிவேப்பிலை சிறிது,
- எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய். கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேருங்கள். அத்துடன் மஞ்சள்தூள், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், அரைத்த மசாலா விழுது, தக்காளி சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இரண்டரை கப் தண்ணீர் விட்டு, தேவை யான உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடுங்கள். பிறகு, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
இட்லி, இடியாப்பத்துக்கு அருமையான குருமா.