தக்காளி சாதம்

தேவையானவை:

  • பாஸ்மதி அரிசி   ஒரு கப்,
  • தக்காளி சாறு   ஒரு கப்,
  • வெங்காயம்   1,
  • பூண்டு   5,
  • மிளகாய்தூள்   அரை டீஸ்பூன்,
  • பச்சைமிளகாய்   1,
  • உப்பு   தேவையான அளவு,
  • எண்ணெய்   2 டேபிள்ஸ்பூன்,
  • பட்டை, லவங்கம்,
  • ஏலக்காய்   தலா 2.

செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி, முக்கால் கப் தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். எண்ணெயைக் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும், தக்காளி சாறு, மிளகாய்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து, ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து ஊற்றிக் கிளறுங்கள்.

தண்ணீர் லேசாக வற்றியதும், தீயைக் குறைத்து, தட்டு போட்டு மூடி, அதன்மேல் சற்று கனமான பொருளை வையுங்கள். 15 நிமிடம் கழித்து வெந்ததும் இறக்குங்கள். குக்கரில் வைத்துப் பண்μவதாக இருந்தால் ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.