தேவையானவை:
- மிக சிறிய அளவிலான தக்காளி 10,
- நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் 10,
- நறுக்கிய குடமிளகாய் துண்டுகள் 20 ,
- நறுக்கிய பன்னீர் துண்டுகள் 10,
- வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் 10, (பைனாப்பிள், குடமிளகாய், பன்னீர், உருளைக்கிழங்கு நான்கையும் தக்காளி அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும்),
- மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்,
- சீரகத்தூள் அரை டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எண்ணெயைக் காய வைத்து பைனாப்பிள் நீங்கலாக மீதி காய்களை சேர்த்து ஒன்றாக புரட்டி மிளகுத் தூள், சீரகத்தூள் சேர்த்து 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை வைத்திருந்து இறக்கியதும், பைனாப் பிள் துண்டுகள் சேருங் கள். மதிய வேளைக்கு உகந்த சாலட்.
குறிப்பு: விரும்பினால் ருசிக்கு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். விரும்பினால் ருசிக்கு எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளலாம்.