தேவையானவை:
- பச்சரிசி ஒரு கப்,
- புழுங்கல் அரிசி ஒரு கப்,
- வெந்தயம் 2 டீஸ்பூன்,
- தக்காளி கால் கிலோ,
- காய்ந்த மிளகாய் 10,
- தேங்காய் துருவல் அரை கப்,
- உப்பு தேவையான அளவு,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம் மூன்றையும் ஊற வையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து 4 லிருந்து 5 மணி நேரம் புளிக்க விடுங்கள். பிறகு தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கலந்து தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு மெல்லிய தோசையாக இடுங்கள். மொறுமொறு தக்காளி தோசை ரெடி. குறிப்பு: விருப்பப்பட்டால், வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி சேர்க்கலாம்.