தக்காளி பட்டாணி உருளைக்கிழங்கு பச்சடி

தேவையானவை:

  • துவரம்பருப்பு   அரை கப்,
  • சின்ன உருளைக்கிழங்கு   1,
  • பட்டாணி   கால் கப்,
  • பெரிய வெங்காயம்   1,
  • பழுத்த தக்காளி   3,
  • பச்சை மிளகாய்   2,
  • மிளகாய்தூள்   அரை டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள்   ஒரு டீஸ்பூன்,
  • புளி   நெல்லிக்காய் அளவு,
  • உப்பு   தேவையான அளவு.

தாளிக்க:

  • கடுகு   அரை டீஸ்பூன்,
  • சீரகம்   கால் டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு   அரை டீஸ்பூன்,
  • சோம்பு   ஒரு சிட்டிகை,
  • எண்ணெய்   2 டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை   சிறிது.

செய்முறை: பருப்பைக் குழையாமல் வேக வையுங்கள். உருளைக்கிழங்கின் தோலைச் சீவிப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்குங்கள். மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். வெந்த பருப்பில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பட்டாணி சேர்த்து வெந்ததும், புளியைக் கரைத்து ஊற்றுங்கள். மிதமான தீயில் 5 நிமிடம் கொதித்த பின் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து ஊற்றுங்கள். எல்லா டிபனுக்கும் ஏற்ற சைட் டிஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *