தக்காளி பனீர் பஜ்ஜி

தேவையானவை:

  • பழுத்த சிவப்பான தக்காளி  3,
  • பனீர்   200 கிராம், வெங்காயம் 1,
  • இஞ்சி பூண்டு விழுது   ஒரு டீஸ்பூன்,
  • மிளகாய்தூள்  ஒரு டீஸ்பூன்,
  • பொடியாக நறுக்கிய மல்லித்தழை  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • கரம் மசாலா   கால் டீஸ்பூன்,
  • மைதாமாவு   அரை கப்,
  • பிரெட் தூள்  தேவையான அளவு,
  • உப்பு   தேவையான அளவு,
  • எண்ணெய்   பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பனீரை துருவிக் கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். தக்காளியை 4 துண்டுகளாக நீளவாக்கில் நறுக்குங்கள். அதனுள் உள்ள விதை பகுதியை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், தக்காளி, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக கிளறி, தக்காளி விதை மற்றும் பனீர் சேர்த்து சுருள கிளறி இறக்குங்கள். மைதா மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். தக்காளித் துண்டுகளை பனீர் கலவையில் நிரப்பி, மைதா கரைசலில் முக்கி எடுத்து நன்கு பிரெட் தூளில் புரட்டி கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து அதில் புரட்டி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுங்கள்.