திடீர் பாயசம்

தேவையானவை:

  • கெட்டியான பசும்பால்  ஒரு கப்,
  • சர்க்கரை  2 டீஸ்பூன்,
  • ‘மாஸ்’ பாதாம் பவுடர்  2 டீஸ்பூன்,
  • கண்டென்ஸ்டு மில்க்  2 டேபிள்ஸ்பூன்,
  • முந்திரி, கிஸ்மிஸ்,
  • நெய்  தலா சிறிதளவு,
  • குங்குமப்பூ  ஒரு சிட்டிகை.

செய்முறை: பாலில் சர்க்கரையை போட்டு, அது கரைந்ததும் அதோடு பாதாம் பவுடர், கண்டென்ஸ்டு மில்க் இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். கொதித்து ஒன்று சேர்ந்தவுடன் இறக்கிவைத்து முந்திரி, கிஸ்மிஸ், நெய்யில் வறுத்துப் போடுங்கள். குங்குமப்பூவை மேலே தூவுங்கள். திடீரென விருந்தினர் வந்துவிட்டால் பதட்டப்படாமல் செய்து அசத்தக்கூடிய ‘அவசர பாயசம்’ இது.