தேவையானவை: அரிசி வடகம் (முறுக்கு வடகம்) & 10, மோர் _ ஒரு கப், எண்ணெய் & சிறிதளவு, கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு & அரை டீஸ்பூன், நிலக்கடலை & ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை & சிறிதளவு, மல்லித்தழை & சிறிதளவு.
செய்முறை: வடகத்தை சிறு துண்டுகளாக ஒடித்துக்கொள்ளவும். அவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி.. பிறகு, 20 நிமிடம் மோரில் ஊறவிடவும் (வடகத்தூள் மூழ்கும் வரை மோர் விட்டால் போதும்). பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நிலக்கடலை போட்டு வறுத்து, ஊறின வடகத்தை போட்டு வதக்கி, கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்கவும். அவசரத்துக்கு செய்ய அருமையான உப்புமா.
குறிப்பு: வடகத்திலேயே உப்பு இருப்பதால், தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்கலாம்.