நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை:

  • பெரிய நெல்லிக்காய்  நான்கைந்து,
  • பெருங்காயத்தூள்  2 சிட்டிகை,
  • தயிர்  ஒரு கப்,
  • பச்சை மிளகாய்  2,
  • தேங்காய் துருவல்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • மல்லித்தழை  சிறிதளவு,
  • உப்பு  திட்டமாக,
  • கறிவேப்பிலை  2 ஆர்க்கு,
  • எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சை மிளகாயை வதக்கிக்கொள்ளவும். நெல்லிக்காயை வதக்கி, கொட்டையை எடுத்துவிட்டு, சதைப் பாகத்துடன் உப்பு, வதக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். அரைத்த நெல்லிக்காயைத் தயிரில் கலக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும். தேங்காய் துருவலை அப்படியே சேர்க்கலாம். அல்லது நெல்லிக்காயுடன் அரைத்தும் கலக்கலாம்.