நெல்லிக்காய் பாயசம்

தேவையானவை:

  • பெரிய நெல்லிக்காய்  5,
  • சர்க்கரை  அரை கப்,
  • பால்  2 கப்,
  • நெய்  சிறிதளவு,
  • பாதாம்பருப்பு,
  • முந்திரிப்பருப்பு  20,
  • கிஸ்மிஸ்  சிறிதளவு,
  • ஏலம் பொடித்தது  சிறிதளவு,
  • தேன்  ஒரு சிறிய கப்,
  • ஜாதிக்காய் பொடி  சிறிதளவு.

செய்முறை: நெல்லிக்காயை நன்கு கழுவி ஆவியில் வேகவையுங்கள். பிறகு அதை சிறு சிறு துண்டாக (மிகவும் பொடியாக) நறுக்கி, அதை தேனில் ஒரு மணி நேரம் ஊறப்போடுங்கள். பிறகு பாதாம்பருப்பு, முந்திரிப் பருப்பை ஊறவைத்து சிறிது நேரம் கழித்து மைபோல் அரைத்து, பாலுடன் சேர்த்து சர்க்கரையையும் போட்டு நன்கு கொதிக்க வைக்கவேண்டும். பின் ஊறவைத்த தேன் நெல்லிக்காயையும் பாலில் போட்டு, சில நிமிடங்களில் இறக்கிவிடுங்கள். அதில் ஏலக்காய்தூள், ஜாதிக்காய் பொடி, கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் வறுத்துப் போட்டு இறக்கவும். அருந்தும்போது, பல்லில் கடிபடும் தேன் நெல்லிக்காயை பாயசத்துடன் சேர்த்து சுவைத்தால்.. அடடா, அபாரம்!