தேவையானவை:
- பனீர் 200 கிராம்,
- குழம்பு மசாலா தூள் (கடைகளில் கிடைக்கும்) ஒன்றரை டீஸ்பூன்,
- இஞ்சிபூண்டு விழுது அரை டீஸ்பூன்,
- கார்ன்ஃப்ளார் ஒரு டீஸ்பூன்,
- அரிசிமாவு அரை டீஸ்பூன்,
- உப்பு (குழம்பு மசாலா தூளில் உப்பு இருக்கும் என்பதால்) கால் டீஸ்பூன், எ
- லுமிச்சம்பழச் சாறு அரை டீஸ்பூன்,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: பனீரை விரல் நீளத்துக்கு நறுக்கி தனியே வையுங்கள். மசாலாதூள், இஞ்சிபூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், அரிசிமாவு, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். பஜ்ஜி மாவை விடக் கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும். பனீரை இந்தக் கலவையில் போட்டு, உடைந்துவிடாமல் பிரட்டி, எண்ணெயைக் காயவைத்து, நான்கு நான்காகப் போட்டு நன்கு சிவக்கப் பொரித்தெடுங்கள். கவனிக்கவும்: எண்ணெய் நன்கு காயவேண்டும். இல்லையென்றால் மசாலா தனியாக, பனீர் தனியாகப் பிரிந்துவந்துவிடும். (குறிப்பு: அசைவச் சுவை பிடித்தவர்கள், குழம்பு மசாலாவுக்குப் பதிலாக ‘சிக்கன் 65’ மசாலா தூளைப் போடலாம்).