...

பலாக்காய் வறுவல்

தேவையானவை:

  • பலாக்காய்  கால் பகுதி,
  • கார்ன்ஃப்ளார்  அரை டீஸ்பூன்,
  • கடலைமாவு  ஒரு டீஸ்பூன்,
  • வரமிளகாய்  5,
  • பூண்டு  3,
  • சோம்பு  அரை டீஸ்பூன்,
  • உப்பு  அரை டீஸ்பூன்,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: பலாக்காயை மிகவும் பொடியாக நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வடிகட்டுங்கள். மிளகாயுடன் சோம்பு, பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மசாலா, கடலைமாவு, கார்ன்ஃப்ளார், உப்பு போட்டு பிசறி ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.