தேவையானவை:
- பலாச்சுளை 4,
- வெல்லம் தேவையான அளவு,
- கடுகு கால் முந்திரிப்பருப்பு (விருப்பப்பட்டால்) சிறிது,
- ஏலக்காய்தூள் சிறிது.
செய்முறை: பலாச்சுளையில் உள்ள கொட்டையை எடுத்து விட்டு அதைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெல்லத்தில் லேசாக தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் வடிகட்டி, கல்லை நீக்கிக்கொள்ளவும். வெந்த பலாச்சுளையுடன் வெல்லப்பாகு சேர்த்து கெட்டியானதும் ஏலத்தூள் சேர்த்து இறக்கவும். கடுகு தாளித்துக் கொட்டவும். பிரியப்பட்டால் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போடலாம். குழந்தைகளைக் கவரும் பச்சடி இது.