தேவையானவை:
- பச்சரிசி – 2 கப்,
- உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
- தேங்காய் துருவல் – ஒரு கப்,
- உப்பு – தேவையான அளவு,
- பலா மரத்தின் இளம் இலைகள் – சிறிதளவு.
செய்முறை: அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவையுங்கள். பிறகு, தேங்காய் துருவலுடன் சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்கவிடுங்கள் (6 மணி நேரமாவது இருக்கவேண்டும்).பலா இலைகளில் நான்கை எடுத்து, முதலில் இரண்டு இலைகளின் அடி பாகத்தை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, சிறு குச்சியால் குத்தி இணைத்துகொள்ளுங்கள். பிறகு, மீண்டும் இரண்டு இலைகளை இதன் மேல் குறுக்காக வைத்து, குச்சியால் குத்தி இணையுங்கள். இந்த நான்கு இலைகளையும் மடக்கி ‘கப்’ போல செய்யுங்கள். இப்படியே எல்லா இலைகளையும் செய்துகொள்ளுங்கள். இந்த இலை கப்புகளில் மாவை ஊற்றி, இட்லித் தட்டில் வைத்து வேகவைத்தெடுங்கள்.
இதை இன்னொரு முறையிலும் செய்யலாம். அரிசி, உளுந்தை அரைக்கும்போது, காய்ந்த மிளகாய் – 8, புளி – ஒரு சிறிய உருண்டை, உப்பு – தேவையான அளவு சேர்த்து அரைத்து, உடனேயே இலைகளில் ஊற்றி, ஆவியில் வேகவைத்தெடுத்துப் பரிமாறுங்கள். (இம்முறையில் செய்வதற்கு, மாவு புளிக்கத் தேவை இல்லை).