பாகற்காய் பக்கோடா

தேவையானவை:

  • பாகற்காய் (நடுத்தரமான அளவில்)  2,
  • கடலை மாவு  அரை கப்,
  • அரிசி மாவு  அரை கப்,
  • பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன்,
  • மிளகாய்தூள்  1 டீஸ்பூன்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: பாகற்காயைக் கழுவித் துடைத்து, மெல்லிய வட்டங்களாக நறுக்கி, விதைகளை நீக்குங்கள். கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை பாகற்காயுடன் சேர்த்துப் பிசறிக் கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, பிசறிய கலவையில் மேலும் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெயில் போட்டு மித மான தீயில் பொரித் தெடுங்கள்.

எண்ணெய் அதிகமாகக் காய்ந்தால், பாகற்காய் கருகிவிடும். எனவே தீயைக் குறைத்துவைத்து வேகவிடுங்கள். கசப்பு தெரியாத, கரகரப்பான பக்கோடா இது.