தேவையானவை:
- பாசிப்பருப்பு ஒரு கப்,
- தேங்காய் துருவல் அரை கப்,
- பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- இஞ்சி ஒரு துண்டு,
- பச்சை மிளகாய் 3,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை பெருங்காயம், உப்பு சேர்த்து மலர வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பருப்பு, தேங்காய் சேர்த்து கிளறி இறக்குங்கள். குறிப்பு: பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்காமல் பாத்திரத்தில் வேகவைக்கவேண்டும். அப்போதுதான் மலர வேகும்.