பாசிப்பருப்பு பக்கோடா

தேவையானவை:

  • பாசிப்பருப்பு ஒரு கப்,
  • பெரிய வெங்காயம் 2,
  • பச்சை மிளகாய் 2,
  • இஞ்சி ஒரு துண்டு,
  • கறிவேப்பிலை சிறிது,
  • தனியா (ஒன்றிரண்டாக உடைத்தது) 2 டீஸ்பூன்,
  • உப்பு, எண்ணெய் தலா தேவையான அளவு.

செய்முறை: பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்குங்கள். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, இஞ்சி, உப்பு, தனியா சேர்த்து கரகரப்பாக அரைத் தெடுங்கள். நறுக்கிய எல்லாவற்றையும் அரைத்த பருப்புக் கலவையில் சேர்த்துப் பிசைந்து, எண்ணெயைக் காயவைத்து சிறுசிறு பக்கோடாக்களாகக் கிள்ளிப் போட்டு வேகவைத்தெடுங்கள். மாலை நேரத்துக்கு, ‘கரகர’வென சுவை சேர்க்கும் அருமையான சிற்றுண்டி இது.