பீட்ரூட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & அரை எண்ணெய் & நெய் கலவை & தேவையான அளவு. டீஸ்பூன்,

அரைக்க: பீட்ரூட் (நடுத்தரமான அளவு) & 1, சோம்பு & ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் & ஒரு டீஸ்பூன், பூண்டு (விருப்பப்பட்டால்) & 2 பல், உப்பு & தேவையான அளவு.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு. நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை சேர்த்து சுட்டெடுங்கள். அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.