தேவையானவை: பீர்க்கங்காய் – கால் கிலோ, பாசிப்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், எலுமிச்சம்பழச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – சிறிதளவு. பொடிக்க: காய்ந்த மிளகாய் – 6, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவைத்தெடுங்கள். கடலைப்பருப்பை குக்கரில் வேகவையுங்கள். பீர்க்கங்காயை தோல் சீவி, துண்டுகளாக நறுக்குங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக சிவக்க வறுத்து பொடித்துக்கொள்ளுங்கள். கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, பீர்க்கங்காய், உப்பு சேர்த்து நன்கு வேகவிடுங்கள். வெந்ததும், பொடி தூவி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.