தேவையானவை:
- புடலங்காய் பாதி,
- பச்சை மிளகாய் 2,
- சின்ன வெங்காயம் ஐந்தாறு,
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
- தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்,
- உப்பு திட்டமாக,
- கறிவேப்பிலை,
- மல்லித்தழை தலா சிறிதளவு,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மிகவும் இளசான புடலங்காயாகப் பார்த்து வாங்கவும். அதைப் மிகப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாகவும், சின்ன வெங்காயத்தைப் பொடியாகவும் நறுக்கவும். எண்ணெயில் தாளிதம் போட்டு வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும். இத்துடன் புடலங்காயை லேசாக வதக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். (அல்லது காயில் உப்பு பிசறி வைத்திருந்து தண்ணீரைப் பிழிந்து விட்டுப் பச்சையாகச் சேர்க்கலாம்). தேங்காய் துருவலையும் சேர்க்கவும். பரிமாறும்பொழுது தயிர், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும்.