புடலங்காய் பொரியல் 3

தேவையானவை:

  • புடலங்காய்  கால் கிலோ,
  • பெரிய வெங்காயம்  1,
  • தக்காளி  2, பூண்டு  பாதி (ஒரு பல்லை பாதியாக நீளவாக்கில் நறுக்கவும்),
  • உப்பு,
  • மிளகாய்தூள்  தேவையான அளவு,
  • தேங்காய் துருவல்  கால் மூடி.

தாளிக்க:

  • கறிவேப்பிலை,
  • மல்லி இலை  சிறிதளவு,
  • கடுகு  அரை டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன்,
  • எண்ணெய்  3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெங்காயம், புடலங்காயை மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கவும். தக்காளியைக் கொஞ்சம் கனமான நீளத் துண்டுகளாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பூண்டு, வெங்காயத்தை வதக்கவும். புடலங்காயைச் சேர்த்து அது வெந்ததும், தக்காளியைப் போட்டுப் பிரட்டி உப்பு, வற்றல் பொடி சேர்க்கவும். உப்பு உறைப்பு சேர்ந்ததும் தேங்காயை சேர்த்து கீழே இறக்கி மல்லி இலை தூவவும்.