...

புடலங்காய் பொரியல் v1

தேவையானவை:

  • புடலங்காய்  கால் கிலோ,
  • மிளகாய்தூள்  முக்கால் டீஸ்பூன்,
  • உப்பு  தேவையான அளவு,
  • எண்ணெய்  5 டேபிள்ஸ்பூன்,
  • கடுகு, உளுத்தம்பருப்பு  தேவைக்கேற்ப,
  • கடலைமாவு  ஒரு கைப்பிடி.

செய்முறை: புடலங்காயைக் கழுவி, மெல்லிதாக நீள நீளமாக அரியவும்.வாணலியில் தாளித்து போட்டு புடலங்காயைச் சேர்த்து வதக்கவும். அடுப்பைக் குறைத்து வைத்து, வாணலியை மூடி வைக்கவும். காய் வெந்து வதங்கியதும், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து முறுகலாக வதக்கி, கடலைமாவைத் தூவி இறக்கவும்.

குறிப்பு: கடலைமாவு தூக்கலாக இருக்கக் கூடாது. ஏதோ போட்டோம் என்று பெயருக்குத்தான் போட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.