தேவையானவை: புடலங்காய் – கால் கிலோ, பாசிப்பருப்பு – அரை கப், பால் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.
அரைக்க: உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, தேங்காய்துருவல் – 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் மலர வேகவையுங்கள். புடலங்காயை கழுவி இரண்டாக வெட்டி விதை நீக்கி மெல்லிய அரை வட்டத் துண்டுகளாக நறுக்குங்கள். குக்கரில் புடலங்காயை போட்டு அரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து, ஒரு விசில் வைத்து இறக்கி ப்ரஷரை வெளியேற்றிவிட்டு பருப்புடன் சேருங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் உளுத்தம்பருப்பு, சீரகத்தை மட்டும் பொன்னிறமாக வறுத்து, மற்ற பொருட்களை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்குங்கள். அதை ஆறவைத்து அரைத்து புடலங்காயுடன் சேருங்கள். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கி பால் சேருங்கள்.
சாதத்துக்கு ஊற்றிக்கொள்ளவும், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும் ஏற்ற குழம்பு.